தஞ்சாவூர்

காடு வளர்ப்புத் திட்டத்தில் கிராமங்களில் அடிப்படை வசதிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காப்புக் காடுகளையொட்டி உள்ள 2 கிராமங்களில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் காப்புக் காடுகளையொட்டி உள்ள 2 கிராமங்களில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டு வன மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் அவர் பேசியது: மாவட்டத்தில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், சென்னம்பட்டி, மகாராஜபுரம் ஆகிய 2 கிராமங்கள் காப்புக் காடுகளை ஒட்டி உள்ளன. எனவே, இக்கிராமங்களுக்கு அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கிராம ஏரி, குளங்களைத் தூர்வாருதல், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வனத் துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கி நடுதல், அண்ணா நகரில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். மகாராஜபுரம் கிராமத்தில் பால்வாடி கட்டடம் கட்ட வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சீ. குருசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT