தஞ்சாவூர்

பாபநாசத்தில் ஜமாபந்தி தொடக்கம்

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை (மே 25) தொடங்குகிறது.

DIN

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை (மே 25) தொடங்குகிறது.
இதுகுறித்து வட்டாட்சியர் க. ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், மே 25-ம் தேதி தொடங்கி, ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் திருத்தம், நில அளவை, கணினி சிட்டா மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அனைத்து வகையான
சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வுபெறலாம்.
மே 25-ம் தேதி அய்யம்பேட்டை வருவாய் சரகத்திற்கு உட்பட்ட வீரமாங்குடி, ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, கணபதியக்ரஹாரம், உள்ளிக்கடை, ஆடுதுறை பெருமாள்கோவில், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சூலமங்கலம் 1,2-ம் சேத்தி, பசுபதிகோவில் 1,2-ம் சேத்தி, வேம்புகுடி, செருமாக்க நல்லூர், பெருமாக்க நல்லூர், வடக்குமாங்குடி, அகரமாங்குடி, சுரைக்காயூர், வையச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் அந்தந்த கிராம மக்கள் அனைத்து விதமான சான்றிதழ்கள், நலத் திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வுபெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT