தஞ்சாவூர்

மாதாகோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

DIN

தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் எதிரே மாதாகோட்டை சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, இந்தச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன்படி, இச்சாலையை அகலப்படுத்துவதற்கு வசதியாகக் குழந்தை இயேசு ஆலயத்தின் எதிரிலிருந்து மாதாகோட்டை சாலையில் புறவழிச்சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை தொடங்கினர்.
இதில், சாலையோரத்தில்
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
இப்பணிகள் முடிவடைந்த பிறகு இச்சாலையை விரிவுபடுத்தி, சாலை தடுப்பு அமைக்கப்படவுள்ளது என்றனர் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT