தஞ்சாவூர்

விவசாயி வீட்டில் பத்தரை பவுன் நகை, ரொக்கம் திருட்டு

அம்மாபேட்டை காவல் சரகம், தளவாபாளையம் ஊராட்சி, நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் மகன் முருகேசன் (40), விவசாயி. இவர் கடந்த

DIN

அம்மாபேட்டை காவல் சரகம், தளவாபாளையம் ஊராட்சி, நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் மகன் முருகேசன் (40), விவசாயி. இவர் கடந்த 22-ம் தேதி இரவு வீட்டின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பத்தரை பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் அகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். புகாரின்பேரில், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், அம்மாபேட்டை ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT