தஞ்சாவூர்

அதிரை பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட  பெரிய அளவிலான குர்ஆன்!

தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினம்,  நெசவுத்தெரு பகுதியில் புதிதாககட்டி முடிக்கப்பட்டு,  வியாழக்கிழமை காலை திறப்பு விழா காணும் மஸ்ஜீதுல்-

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினம்,  நெசவுத்தெரு பகுதியில் புதிதாக
கட்டி முடிக்கப்பட்டு,  வியாழக்கிழமை காலை திறப்பு விழா காணும் மஸ்ஜீதுல்-ஹுதா பள்ளிவாசலுக்கு அளவில் மிகப்பெரிய குர் ஆன் புனித நூல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.  
இதை மலேசியாவில் கடை நடத்தும்  அதிரையைச் சேர்ந்த ஏ.முகைதீன்என்பவர் தொழுகையாளிகளின் பயன்பாட்டிற்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சவூதி அரேபியாவில் தயாரிக்கப்பட்ட,  அரபு மொழியில் 604 பக்கங்கள் கொண்ட இந்த குர்ஆன் புனித நூலின் நீளம் ஒன்றே முக்கால் அடி, அகலம் இரண்டரை அடி. இதன் எடை 5 கிலோ ஆகும். பிரத்யேகமாக  தயாரிக்கப்பட்ட சில்வர் ஸ்டாண்டில் இடம் பெற்றுள்ள மெகா சைஸ் குர் ஆன் நூல்  அதிரை மஸ்ஜீதுல்-ஹுதா' பள்ளிவாசலில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டது. இதை பள்ளிவாசலுக்கு வந்த தொழுகையாளிகள் பலர் ஆர்வத்துடன் வாசித்துச் சென்றனர்.
அதிராம்பட்டினம் பள்ளிவாசலில் முதல் முறையாக அளவில் மிகப்பெரிய குர்ஆன் புனித நூல்  
வைக்கப்பட்டுள்ளது என பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT