தஞ்சாவூர்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

கும்பகோணத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கும்பகோணத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மகாமகக் குளம் மேல்கரையிலிருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ரெட்கிராஸ் செயலர் ஜோசப் தலைமை வகித்தார். குடந்தை ஹோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் லெட்சுமிநாராயணன், செயலர் தாண்டேஸ்வரன், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை டி.எஸ்.பி. கணேச மூர்த்தி தொடக்கி வைத்தார்.
மகாமகக் குள மேல்கரையிலிருந்து தொடங்கிய  பேரணி அஞ்சலகசாலை, பெரியகடைத்தெரு, உச்சிப்பிள்ளையார் கோவில் வழியாக நகர மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் நகரின் பள்ளிகளைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட ஜே.ஆர்.சி. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறு சென்றனர்.
மேலும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர். முன்னதாக, கும்பகோணம் கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி அமைப்பாளர் ஜான்ஸ்டீபன் வரவேற்றார். நிறைவில் மாவட்ட ஜே.ஆர்.சி. இணைக் கன்வீனர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி. கவுன்சிலர்கள் பவுல், ஆறுமுகம், அருணகிரி, இளையராஜா, செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT