தஞ்சாவூர்

நெல் குவிண்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை

DIN

நெல் குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து திருவோணம் வட்டார விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வி.கே. சின்னத்துரை அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 
தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடிக்கான விவசாய  இடுபொருட்கள் விலை உயர்ந்ததாலும், விவசாய தொழிலாளர்களுக்கு கூலி தொகை உயர்த்தி வழங்கப்படுவதாலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.விவசாயிகளின் உற்பத்தி செலவினங்களை கருத்தில்கொண்டு நடப்பாண்டில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகையை ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

SCROLL FOR NEXT