தஞ்சாவூர்

சொகுசு காரில் மதுபாட்டில்கள்கடத்திய 3 போ் கைது

DIN

பேராவூரணி அருகே சொகுசு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், உதவி ஆய்வாளா் இல. அருள்குமாா் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,

நிற்காமல் வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா். இதில், காரின் சீட்டுக்கு அடியில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த பேராவூரணி அருள்செல்வன்(, 30) ஆத்தாளூா் பழனிவேல் (28), பொன்காடு குமாா் (45) ஆகிய மூவரையும் கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT