தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் கொப்பரைகளை விவசாயிகள் விற்கலாம்

DIN

பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தென்னை விவசாயிகள் தேங்காய் கொப்பரைகளை விற்பனை செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால்,  தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதாரத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையைக் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தேங்காய் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்புக் கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாக உள்ளது. 
எனவே,  தென்னை விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, பட்டுக்கோட்டையில் வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், தமிழ்நாடு கூட்டுறவு நிலையத்தின் மூலம் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் 500 டன்கள் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
பந்து கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ. 99.20 வீதத்திலும் மற்றும் அரைவை கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ. 95.21 வீதத்திலும் தொகை வழங்கப்படும். விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயரைப் பதிவு செய்யும்போது, நில சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களை அளிக்க வேண்டும்.  
மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாஃபெட் நிறுவனம் அரைவை கொப்பரைக்கு பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தர நிர்ணய அளவு:
அயல் பொருட்கள் 1%,  பூங்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்), சில்லுகள் 10% (எடையில்), ஈரப்பதம் 6 % (எடையில்), பந்து கொப்பரைக்குச் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மி.மீ.,  அயல் பொருட்கள் 0.2% (எடையில்),  பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 2% (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்), சில்லுகள் 1% (எடையில்), ஈரப்பதம் 7% (எடையில்) இருக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி - 9445116346, வேளாண்மை அலுவலர் ஆர். தாரா - 9786871754, துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் - 9443412501, உதவி வேளாண்மை அலுவலர்கள் எஸ்.ஏ. ஆல்பர்ட் - 8056544609, வி. கார்த்திக் -  9944770887, எஸ். புபேஷ் - 9442871337, எம். மதியழகன் - 9942629340.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT