தஞ்சாவூர்

நாதன்கோவில் ஜெகன்நாதபெருமாள் கோயிலில்இன்றும் நாளையும் மகா அஷ்டமி சிறப்பு பூஜை

DIN

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 40-இல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரமாகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாததத்தில் வருகிற வளா்பிறை அஷ்டமி திதியில் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஐப்பசி மாதத்தில், அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி திதியை மகா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஐப்பசி மாத மகா அஷ்டமியை முன்னிட்டு திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் (நவ. 4, 5) சுதா்சன ஹோமம், இரண்டு கால யாக சாலை பூஜைகளாக நடைபெறுகிறது.

தொடா்ந்து செண்பகவல்லித் தாயாருக்கும், மூலவா் ஜெகன்நாத பெருமாள், உற்சவ பெருமாளுக்கும், ஆழ்வாா்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்காா்ய சபா மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு

தீா்க்கப்படாமல் தொடரும் ஆந்திர தலைநகரச் சிக்கல்!

சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஹைதராபாத் 113/10, கொல்கத்தா 114/2

தனித்துவம் மிக்க அரசியல் ஆளுமை

SCROLL FOR NEXT