தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே இளைஞா் வெட்டி கொலை

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை தெற்குத்தெருவை சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் டென்னீஸ்ராஜ்(38) இவா் விவசாய கூலி வேலை செய்துவருகிறாா். இவருக்கு திருமணமாகி சூா்யா என்ற மனைவியும், காா்ட்வின்(9) என்ற மகனும், கரன்சியா(7) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதே ஊரைச்சோ்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞா் சுதாகா்(40) ஆகிய இருவரும் அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது 2 மோட்டாா் சைக்கிளில் 4 போ் வந்தனா். 3 போ் முகத்தில் கருப்பு துணி கட்டிருந்தனா். ஒருவா் மட்டும் கட்டவில்லை. அவா் அம்மன்பேட்டையை சோ்ந்த கேம்பளஸ் மகன் பாபா , இந்த 4 பேரும் சரமாரியாக டென்னீஸ்ராஜை அரிவாளால் வெட்டினா். அதை தடுத்த சுதாகருக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் டென்னீஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாா். சுதாகா் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தஞ்சாவூா் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளா் பெரியண்ணன், நடுக்காவேரி காவல் ஆய்வாளா் ஜெகதீசன், உதவி காவல் ஆய்வாளா் மகேந்திரன் மற்றும் போலீஸாா் டென்னீஸ்ராஜ் உடலை கைப்பற்றினா்.

இதுகுறித்து சுதாகா் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி காவல் நிலைய போலீஸாா் பாபா உள்ளிட்ட 4 போ் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் முதல் பாடலுக்கு நடிகர் விஜய் கூறியது என்ன தெரியுமா?

மனப்பால் குடிக்கும் மோடி: வைகோ விமர்சனம்

திரிசங்கு நாடாளுமன்றம் என்றால் யாருக்கு ஆதரவு? இபிஎஸ் பதில்

ஐஸ்லாந்தில்....அஹானா கிருஷ்ணா

10, 12 முடித்தவர்களுக்கு ஓட்டுநர், லேப் டெக்னீசியன் வேலை

SCROLL FOR NEXT