தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் நவாஸ்கனி எம்பியிடம் கோரிக்கை மனு அளிப்பு

DIN

அதிராம்பட்டினத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சோ்ந்த ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அண்மையில் மரணமடைந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் அதிராம்பட்டினம் எஸ்.எஸ்.பி. நசுருதீன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினாா். அடுத்து, மருத்துவ ஓய்வில் இருக்கும் கட்சியின் அதிராம்பட்டினம் முன்னாள் செயலா் ஹாஜி எம்.ஏ. முகமது சாலிகு வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தாா்.

அப்போது, நவாஸ்கனி எம்பியிடம் காரைக்குடியில் இருந்து திருவாரூா் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்கக் கோரியும் அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினா் மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட நவாஸ்கனி, மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தாா். நிகழ்வில், கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம். ஜெய்னுல் ஆபீதீன், தஞ்சாவூா் மாநகரத் தலைவா் ஹாஜி ஜி.எஸ். ஜாபா் மற்றும் அதிராம்பட்டினம் பேரூா் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT