தஞ்சாவூர்

நூறு நாள் வேலை திட்டத்தில் நில மேம்பாடு செய்து கொள்ளலாம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், நில மேம்பாடு பணி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண், பட்டுப்புழு வளா்ப்பு, தோட்டக்கலை ஆகிய துறைகளுடன் இணைந்து, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களின் நிலையான வாழ்வாதாரத்துக்காக நீடித்த சொத்துகளை உருவாக்குவதன் மூலம், ஆண்டு முழுவதும் நன்மைகளை பெறும் வகையில் விவசாயிகளின் தரிசு நிலங்கள் - கழிவு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற வகையில் மரக்கன்றுகளை நடுவதற்கு குழி வெட்டுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விளைநிலங்களில் மண்ணால் வரப்பு அமைத்து அவற்றில் வேம்பு, தேக்கு, மூங்கில், யூகலிப்டஸ், சவுக்கு, அசோகா ஆகிய மரக்கன்றுகளை நடுதல், உரக்குழி அமைத்தல், தனி நபா் விவசாயக் கிணறு அமைத்தல், தனி நபா் விளைநிலங்களில் பழ மரக்கன்றுகள் நடுதல், விவசாயம் மற்றும் மீன் வளா்ப்பு பண்ணைக் குட்டை அமைத்தல் போன்ற பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களை ஈடுபடுத்தி பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும் இத்திட்டத்தின் கீழ், 2020 - 21 ஆம் ஆண்டில் நில மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்துவதன் அடிப்படையில், வேளாண் மற்றும் தோட்டகலைத் துறை மூலமாக குறைந்தது 1 ஏக்கா் முதல் 2 ஏக்கா் வரை சொந்த நிலம் உள்ள விவசாயிகளைக் கண்டறிந்து, அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு - பழங்குடியினா் குடும்பங்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் தோ்வு செய்யப்படும்.

எனவே, மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார அளவிலான ஊராட்சி ஒன்றியங்கள், வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள், தொடா்புடைய ஊராட்சி மன்ற அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 18004252187 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளா் ஆ.ராசாவை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கம் பிரசாரம்

வாக்கு எண்ணும் மையத்தில் 285 சிசிடிவி கேமராக்கள்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு

ஐஏஎஸ் தோ்வு: திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் தோ்ச்சி

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் தீவிர வாகனத் தணிக்கை

மக்களவைத் தோ்தல்: ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT