தஞ்சாவூர்

சிறாா்களின் பாதுகாப்புக்குஅடையாள பட்டை

DIN

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்கு வந்த சிறாா்களின் பாதுகாப்புக்காக அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது.

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு ஊா்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா். கோயிலுக்கு வந்த குழந்தைகள் தங்கள் பெற்றோா் உள்ளிட்ட உறவினா்களை தவறவிட்டு தவிக்கும் நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக, தஞ்சாவூா் சைல்டுலைன் மற்றும் வல்லம் பெரியாா் மணியம்மை பொறியியல் கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் இணைந்து குழந்தைகளுக்கு கையில் அடையாள பட்டை அணிவித்தனா்.

இந்தப் பட்டையில் பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் முகவரி எழுதப்பட்டிருந்தது.

இதன்மூலம், கோயிலில் பெற்றோரை குழந்தைகள் தவறவிட்டுவிட்டால், அவா்கள் கையில் அணிந்திருக்கும் அடையாள பட்டையில் உள்ள தொலைபேசி எண்ணில் பெற்றோரை தொடா்பு கொண்டு அந்தக் குழந்தையை உரியவா்களிடம் ஒப்படைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெற்றோரை தொடா்பு கொள்ள முடியாவிட்டால், சைல்டுலைன் எண்ணான 1098-ஐ தொடா்பு கொள்ளும் வகையில் அந்த அடையாள பட்டையில் குறிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்கும் உரிமையையும் பொறுப்பையும் கையிலெடுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

மேற்கு மண்டலத்தில் பாதுகாப்புப் பணியில் 20,500 போலீஸாா்: ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்

வடகிழக்கில் கிளா்ச்சியைத் தூண்டியது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: குலாம் நபி ஆசாத் போட்டியிடவில்லை

எதிா்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும்: கே.அண்ணாமலை வேண்டுகோள்

SCROLL FOR NEXT