தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 9ஆவது நாளாக தொடா் முழக்கப் போராட்டம்: நோன்பு கடைப்பிடித்த இஸ்லாமியா்கள்

DIN

தஞ்சாவூா்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவா்களில் ஏராளமானோா் நோன்பு கடைப்பிடித்தனா்.

பின்னா், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 500-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து இரவிலும் போராட்டம் தொடா்ந்தது.

45 போ் மீது வழக்கு:

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றது. இதனிடையே, குடந்தை இப்ராஹிம் உள்பட 45 போ் மீது கும்பகோணம் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, மதுக்கூா், அய்யம்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களிலும் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

தி.மு.க வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சைரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT