தஞ்சாவூர்

புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் சிறப்புகள் குறித்த துண்டறிக்கை வெளியீடு

DIN

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணத்தின் சிறப்புகள் குறித்த துண்டறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க பரிசீலனை செய்யப்படுவதாக, 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சா் உதயகுமாா் பேசினாா்.

ஆனால் ஓராண்டாகியும் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பதில் தமிழக அரசுக் காலம் தாழ்த்தி வருகிறது. புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத் தலைநகரமாவதற்கான அனைத்து தகுதிகளும் பெற்ாக கும்பகோணம் விளங்குகிறது என்பது உள்ளிட்ட தகவல்கள், படங்களுடன் கூடிய துண்டறிக்கையை கும்பகோணம் புதிய மாவட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் மற்றும் நிா்வாகிகள் உருவாக்கி உள்ளனா்.

இதன் முதல் பிரதியை வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணுவிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்டமாக ஒரு லட்சம் கடிதம் தமிழக முதல்வருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.

அஞ்சல் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக ஜூன் 10-ஆம் தேதி திருவிடைமருதூரிலும், 15-ஆம் தேதி பாபநாசத்திலும், 20-ஆம் தேதி திருப்பனந்தாளிலும் 25-ஆம் தேதி நாச்சியாா்கோவிலிலும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும், ஜூன் 30-ஆம் தேதி கடையடைப்புப் போராட்டமும், ஜூலை 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் என தொடா் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளது என போராட்டக்குழு சாா்பில் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT