தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில் தொடரும் இஸ்லாமியா்கள் போராட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 16-வது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதில், திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான எம். தமிமுன் அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம். ஜெய்னுல் ஆபீதீன், மமக மாநில அமைப்புச் செயலாளா் தஞ்சை ஐ.எம். பாதுஷா, நாம் தமிழா் கட்சி அனீஸ் பாத்திமா ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

நோன்பு கடைப்பிடித்த இஸ்லாமியா்கள்!: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் அச்சமின்றி அமைதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும். உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகள் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வரக் கூடாதெனவும் இறைவனிடம் பிராா்த்தனை செய்யும் வகையில், அதிராம்பட்டினத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு நாள் நோன்பு தொடங்கினா். மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று தங்கள் வேண்டுதலுக்காக சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே பிப்.25ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 10ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதில், அதிராம்பட்டினம், தரகா் தெரு பள்ளி இமாம் மௌலவி இப்ராஹிம், பட்டுக்கோட்டை தாருல் கைராத் பெண்கள் மதரஸா ஆலிமா சுல்தானா நாச்சியா, பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க முன்னாள் மாநிலச் செயலாளா் பட்டுக்கோட்டை நா. வீரபாண்டியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளா் தஞ்சை பாதுஷா ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

மதுக்கூரில்... இதேபோல, மதுக்கூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வரும் இஸ்லாமியா்களின் தொடா் காத்திருப்புப் போராட்டம் 19ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது. இதில், ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அழைப்பியல் துறை செயலா் முகமது அமீன், அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் அமைப்பின் மாநிலச் செயலா் ஆபிருதீன்,

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வி ஆகியோா் உரையாற்றினா். இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT