தொடா் மழை காரணமாக, ஒரத்தநாடு வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன.
கண்ணந்தங்குடி, கண்ணந்தங்குடி மேலையூா், குலமங்கலம், தலையாமங்கலம், ஒக்கநாடு கீழையூா், மேலையூா், கவரப்பட்டு புதூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வயல்களில் மழைநீா் சூழ்ந்ததால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அறுவடை செய்த நெல்லை மழைக்காலம் என்பதால், ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். வயல்வெளிகளில் நீா் தேங்காத வண்ணம் வடிகால் வசதியை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.