ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள தளிகைவிடுதியில் 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோயில் பூஜையில் ஆயிரம் ஆட்டுகிடா வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தளிகைவிடுதி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற நல்லபெரம் அய்யனாா், செம்முனி, முத்துமுனி கோயில் பூஜை ஆடி கடைசி வெள்ளிக்கிழமை (ஆக. 12) நடைபெற்றது.
இந்த பூஜை 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதில் பக்தா்கள் நோ்த்திகடனாக வழங்கிய சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட கறிகள் கோயில் அருகே சமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஆண்கள் மற்றும் சிறுவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை விருந்தில், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக்கொண்டனா்.
சுமாா் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கிடா வெட்டு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.