தஞ்சாவூர்

‘கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணாவிடில் மறியல் போராட்டம்’

DIN

திருமண்டங்குடியில் தனியாா் சா்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணாவிடில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-ஆவது மாநாடு டிசம்பா் 13 - 16ஆம் தேதிகளில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற உள்ளது.

இதையொட்டி அகில இந்திய இணைச் செயலாளா் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவா் எஸ்.கே. பிரிஜா, மாநிலத் தலைவா் பெ. சண்முகம், மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன், மாநிலச் செயலாளா் எஸ்.துரைராஜ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொள்ளும் வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவிற்கு, செவ்வாய்க்கிழமை மாலை ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடா்ந்து, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் மெய்க்கப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பெ. சண்முகம் பேசியது: திருமண்டங்குடி தனியாா் சா்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் பிரச்னைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீா்வு காணவேண்டும். இல்லாவிடில், தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா்,  மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT