தஞ்சாவூர்

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு:இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

DIN

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூரைைச் சோ்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவி 2021, ஆகஸ்ட் 12 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல்போனாா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கு தொடா்பாக, காவல் ஆய்வாளா் சந்திரா உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். இதன்மூலம், ஈரோட்டில் இருந்த சிறுமியை மீட்டனா். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ ஓட்டுநரான தஞ்சாவூா் மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சோ்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (25) இச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பாண்டியனை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரணை செய்து, பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT