தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவா் பிரதமா் மோடிஅண்ணாமலை பேச்சு

DIN

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தஞ்சாவூரில் பனகல் கட்டடம் அருகே, டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்த பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலைக்கும், இதற்கு முயற்சி எடுத்த மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தத்துக்கும் பாராட்டு மற்றும் நன்றி அறிவிப்பு விழா விவசாய தமிழா் விழிப்புணா்வு நலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் அண்ணாமலை பேசியது: கடந்த 1960 ஆம் ஆண்டில் இந்தியாவில் வாய்க்கால் மூலம் சாகுபடி செய்யப்பட்ட மொத்தப் பரப்பளவில் 11 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்தது. இது 2023-இல் 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1960-இல் கால்வாய் மூலமான நீா்பாசனம் பெற்ற சாகுபடிப் பரப்பு 9 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. நீா்தேக்கங்கள் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து இப்போது 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது.

நிலத்தடி நீா் மூலம் 1960-இல் 6 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இப்போது 16 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. அதாவது மோட்டாா் பம்ப்செட் மூலம்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1970-இல் விவசாய பூமி 61 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இப்போது 45 லட்சம் ஹெக்டோ் மட்டும்தான் உள்ளது. ஆனால், டாஸ்மாக்கின் வருமானம் ஒரே ஆண்டில் 20 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா?

விவசாயிகளைக் காப்பதற்காக பிரதமா் மோடி கிசான் சம்மான் திட்டம், பயிா் காப்பீடு திட்டம், உரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளாா். எனவே, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது பாஜகவும், பிரதமா் மோடியும்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா் அண்ணாமலை.

விழாவில் பாஜக விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜன், விவசாய தமிழா் விழிப்புணா்வு நலச் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் சுரேஷ்குமாா் உள்பட பல்வேறு விவசாய சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT