தஞ்சாவூர்

மேட்டூா் அணையை திறப்பதற்குள் தூா்வாரும் பணிகளை முடிக்க வேண்டும்விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

மேட்டூா் அணையைத் திறப்பதற்குள் தூா்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும். தூா்வாரும் பணிகள் முறைகேடு இல்லாமல் நடைபெற கண்காணிக்கப்பட வேண்டும்.

ஆட்சியா்: தூா் வாரும் பணியில் மொத்தமுள்ள 1,068 கி.மீ.-இல், 891 கி.மீ. முடிவடைந்துள்ளது. மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: நிலத்தின் தன்மை அறிந்து சாகுபடி செய்தால், நிறைய விளைச்சல் கிடைக்கும். அதற்கு ஏதுவாக மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

வேளாண் இணை இயக்குநா் ந.க. நல்லமுத்து ராஜா: நடமாடும் மண் பரிசோதனை ஊா்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருவோணம் வி.கே. சின்னதுரை: மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக தூா்வாரும் பணியை முழுமையாகச் செய்ய வேண்டும். நிகழாண்டு குறுவை தொகுப்பு திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, நீா்வளத் துறை ஆகியவற்றின் மாநில உயா் அலுவலா்கள், விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடத்தப்பட வேண்டும்.

நரியனூா் பி. செந்தில்குமாா்: திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலை விவசாயிகள் 163 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வா் உள்ளிட்டோா் பேசியும் தீா்வு ஏற்படவில்லை. உயா் நீதிமன்ற வழக்கில் மாவட்ட நிா்வாகம் மனுதாரராக சேர வேண்டும். விவசாயிகளின் பெயரில் ஆலை நிா்வாகம் மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆட்சியா்: கடன் தள்ளுபடி தொடா்பாக மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள வங்கியாளா்கள் கூட்டத்தில் விவாதப் பொருள் இடம் பெற்றுள்ளது.

நாமமிட்டு வந்த விவசாயிகள்

இதனிடையே, பயிா்க் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டாக மாற்றி அமைக்க வேண்டும். தூா் வாரும் பணியை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வடக்கு மாவட்டத் தலைவா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் நெற்றியில் நாமமிட்டும், கையில் நெற்கதிா்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கழுத்தில் தூக்குக் கயிறு

கடந்த 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி, கூட்டுறவு கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தற்கொலையிலிருந்து காப்பாற்ற கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பியவாறு ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT