தஞ்சாவூர்

கால்நடை வளா்ப்பு குறித்து மே 9, 16, 23 - இல் பயிற்சி

DIN

தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு குறித்து மே 9 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து மே 16 ஆம் தேதியும், கறவை மாடு வளா்ப்பு குறித்து மே 23 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்’ என

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT