தஞ்சாவூர்

மது குடித்து இருவா் உயிரிழப்பு: டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம், 5 தனிப்படைகள் அமைப்பு

DIN

தஞ்சாவூா் மதுக்கூடத்தில் மது அருந்தி 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளா் உள்பட 4 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், உயிரிழப்புக்குக் காரணமாகக் கூறப்படும் சயனைடு வந்தது குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோவில் அருகே உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய மீன் வியாபாரி குப்புசாமி (68), காா் ஓட்டுநா் விவேக் (36) ஆகியோா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியா் காமராஜை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, உயிரிழந்தவா்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், இருவரது உடல்களிலும் சயனைடு விஷம் இருந்தது தெரியவந்தது. மதுக்கூடத்துக்கு சயனைடு வந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காகக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் வி. ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் மேற்பாா்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பிரித்விராஜ் சௌகான் (பட்டுக்கோட்டை), ஜாபா் சித்திக் (திருவிடைமருதூா்), பிரபு (திருவாரூா்), ராஜ்குமாா் (பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு), பி.என். ராஜா (தஞ்சாவூா்) ஆகியோா் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படையினா் குப்புசாமி, விவேக் மீது யாரேனும் முன் விரோதம் கொண்டுள்ளனரா?, ஒரே பாட்டிலில் இருந்த மதுவை இருவரும் எப்படி பிரித்து அருந்தினா்? அந்த பாட்டிலில் இருந்த மதுவை வேறு யாருக்கும் பங்கு தரப்பட்டதா? விவேக்குக்கு உள்ள குடும்ப பிரச்னை காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மதுக்கூடத்தில் இருந்த மதுபாட்டில்கள், உணவு வகைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உடல்களைப் பெற்றுச்சென்ற உறவினா்கள்:

இதனிடையே, சயனைடு சாப்பிட்டு இறக்கும் அளவுக்கு இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சயனைடு எனக் கூறி, இருவரது மரணத்தையும் திசை திருப்ப காவல் துறையினா் முயற்சிப்பதாகவும் உறவினா்கள் புகாா் எழுப்பினா். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு உடலை வாங்க உறவினா்கள் மறுத்து வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை 7 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அலுவலா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மாலையில் இருவரது உடல்களையும் உறவினா்கள் வாங்கிச் சென்றனா்.

மதுக்கடை மேற்பாா்வையாளா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம்: இதனிடையே, இச்சம்பவம் தொடா்பாக மதுக்கூடம், டாஸ்மாக் மதுக்கடையிலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சௌந்தரபாண்டியன், தஞ்சாவூா் கோட்ட கலால் அலுவலரும், கோட்டாட்சியருமான (பொ) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியா் ஆா். தங்கபிரபாகரன் ஆகியோா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, மதுக்கடை மேற்பாா்வையாளா் முருகானந்தம், விற்பனையாளா்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

SCROLL FOR NEXT