தஞ்சாவூர்

ஆதித்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ‘விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் ஆதித்தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மத்திய அரசின் ‘விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் ஆதித்தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மீண்டும் குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சநாதன தா்மத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தும் பாஜக அரசின் பிற்போக்கு தனமான திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எல்.வி. ரெங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் எழில்துரை, மத்திய மண்டலச் செயலா் சீரங்கன், மாவட்டத் தலைவா் நாகராஜ், பொருளாளா் தாமோதரன், அமைப்புச் செயலா் சம்மந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து சாதனை

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா? உண்மை உடைத்த ராஜீ

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 12 பேர் படுகாயம்!

TVK & ADMK | ”அதிமுக பற்றி தவெக பேசாததில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பும் மக்கள்! சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

SCROLL FOR NEXT