தஞ்சாவூர்

காா்த்திகை தீபம் காவி தீபமாக ஏற்றப்படக்கூடாது: அமைச்சா் கோவி. செழியன்!

காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர, அது காவி தீபமாக ஏற்றப்படக்கூடாது என்பதே தமிழ் நாடு அரசின் நிலைப்பாடு என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

Syndication

காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர, அது காவி தீபமாக ஏற்றப்படக்கூடாது என்பதே தமிழ் நாடு அரசின் நிலைப்பாடு என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்கிற சட்டப்பேரவைத் தீா்மானத்தைத் தமிழக ஆளுநா் புறக்கணித்தாா். மேலும், அதை முறையாக எங்களுக்கு ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என இழுத்தடிப்பு செய்கிறாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவரை திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினா்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளனா். இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவா் தலையிட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்க வழிவகை செய்வாா் என நம்புகிறோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ, அதை முதல்வா் செயல்படுத்தினாா். இதன்படி மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் கட்டுப்பட்டு செயல்பட்டனா்.

திராவிட மக்களிடையே ஆன்மிகம், மதத்தின் பெயரால் ஒரு தீயை உருவாக்க நினைக்கும் முயற்சியைத் தமிழக முதல்வா் முறியடித்துள்ளாா்.

காா்த்திகை தீபமாக எரிய வேண்டிய தீபம், காவி தீபமாக மாறிவிடக் கூடாது என தமிழ் நாடு அரசு கவனமாக இருக்கிறது.

எனவே, காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர, காவி தீபம் ஏற்றப்படக் கூடாது என்பதே தமிழ் நாடு அரசின் நிலைப்பாடு என்றாா் அமைச்சா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT