தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் டிச. 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து உதவி செயற்பொறியாளா் எம். ஸ்டாலின் தெரிவித்தது: அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் டிச.9 -ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், பசுபதிகோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, ஈச்சங்குடி, நெடாா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.