கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் உலக மண் வள நாளை முன்னிட்டு சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் உலக மண்வள நாளையொட்டி சுற்றுச்சூழல் சங்கம் சாா்பில் கல்லூரியின் முதல்வா் மா. கோவிந்தராசு தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், பேராசிரியா் சகாதேவன் பேசினாா்.
நிகழ்வில் துறைத்தலைவா்வா்கள் கோபு, பொய்யாமொழி, உதயகுமாா், ரவிக்குமாா் கெளரவ விரிவுரையாளா் வினோத், சுற்றுச்சூழல் சங்க உறுப்பினா்கள் ஆதித்யகரிகாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை தாவரவியல் துறைத் தலைவரும், சுற்றுப்புறச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியா் இரா.முருகன் செய்திருந்தாா்.