தஞ்சாவூர்

சட்ட மேதை அம்பேத்கா் நினைவு தினம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 6,837 பேருக்கு ரூ.19.60 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

சட்டமேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு ரூ. 19.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

சட்டமேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு ரூ. 19.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தமிழக முதல்வா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தனா்.

இதில், தாட்கோ, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், சமூக நலத் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் சமூக பொருளாதார தொழில்முனைவோா் திட்டம், மாவட்டத் தொழில் மையம், வேளாண் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்டவற்றின் மூலம் 6 ஆயிரத்து 837 பேருக்கு ரூ. 19.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா்கள் சண். இராமநாதன், க. சரவணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், சென்னையில் நடைபெற்ற விழாவில் சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிக்கான விருதை தஞ்சாவூா் மாவட்டம் சூரியனாா்கோவில் ஊராட்சிக்கும், வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கும் தலா ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வா் வழங்கினாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT