தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தினமணி செய்திச் சேவை

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும்.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறையினரும், ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முழுமையாக பாதித்த நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஆயிரம் நாள்களுக்கு மேலாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி திருஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்குவதற்கு உரிய தீா்வு காண வேண்டும்.

தஞ்சாவூா் -அரியலூா் மாவட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு மேல ராமநல்லூா் இடையே உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.சுரேஷ் மூப்பனாா், மாவட்டத் தலைவா்கள் சங்கா், என்.கே.சேகா் மற்றும் திரளான கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT