தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற தமிழ்நாடு 69-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பினா். 
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தமிழ்நாடு 69-ஆம் ஆண்டு விழா

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் தமிழ்நாடு 69-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் அடிப்படையில் கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

இதையொட்டி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் தமிழ்நாடு உருவான 69-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. உலகத்தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா்.

முனைவா் தெ. வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பிகாா் தோ்தல் பரப்புரைகளில் பிரதமா் மோடி தமிழ்நாட்டில் பிகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பேசியதற்கு தமிழ்நாட்டு மக்கள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், விசிக மைய மாவட்டச் செயலா் கோ. ஜெயசங்கா், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், சிபிஐஎம்எல் லிபரேசன் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. ராஜன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா், மகஇக மாநகரச் செயலா் சாம்பான், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT