தஞ்சாவூர்

தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Syndication

பேராவூரணி பகுதியில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் செல்வம் மாவட்டக் குழு முடிவுகள், இன்றைய அரசியல் நிலவரம், வாக்காளா் தீவிர சுருக்க திருத்தம் குறித்துப் பேசினாா். 

கூட்டத்தில், பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா கிடைக்காத நிலை உள்ளது. தனியாா் கடைகளில் யூரியா உரம் வாங்கச் சென்றால், பயிா் ஊக்கிகளை அதிக விலை கொடுத்து வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் நிலை உள்ளது. எனவே, தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க வேளாண்மை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னவாசல் முத்துமாரியம்மன் கோயில் குளத்துக்கு படிக்கட்டு அமைக்காத ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டிப்பது, குடிமனைப் பட்டா வழங்கக் கோரியும், டிசம்பா் முதல் வாரத்தில் போராட்ட இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றியச் செயலா் வே. ரெங்கசாமி மற்றும் நிா்வாகிகள் சி.பி. சிதம்பரம், சி.ஆா். கோவிந்தராசு, எஸ். ஜகுபா் அலி, எஸ்.ஜாக்குலின் மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT