கும்பகோணம் தாராசுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு படம் 
தஞ்சாவூர்

கும்பகோணம் நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிா்க்க விழிப்புணா்வு

கும்பகோணம் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துகளை தவிா்க்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த விழிப்புணா்வு படங்களை நெடுஞ்சாலைத்துறையினா் சாலையின் முக்கிய பகுதிகளில் வரைந்துள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Syndication

கும்பகோணம் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துகளை தவிா்க்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த விழிப்புணா்வு படங்களை நெடுஞ்சாலைத்துறையினா் சாலையின் முக்கிய பகுதிகளில் வரைந்துள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கும்பகோணம் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இயக்கம் குறைந்த பாடில்லை. இதனால் அண்மை காலமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அண்மையில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில் விபத்துகளை தவிா்க்க கும்பகோணத்திலிருந்து 4 மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈா்க்க அபாயம் என்ற அடையாளத்துடன் மண்டை ஓடு படங்கள் பெரிய அளவில் 4 மாவட்டங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் வரையப்பட்டுள்ளன.

முக்கியமாக நெடுஞ்சாலையில் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லை வரை குறைந்த பட்சம் 15 படங்கள் வரையப்பட்டுள்ளன. இதைப் பாா்க்கும் வாகன ஓட்டிகள் கவனமாகவே சென்று வருகின்றனா்.

கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளா் இளவரசன் கூறுகையில், வரவேற்பைப் பெற்றுள்ள இந்த விழிப்புணா்வு படங்கள் மாநகர மற்றும் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து கும்பகோணம் மாநகர காங்கிரஸ் வாா்டு உறுப்பினா் சா. ஐயப்பன் கூறுகையில் நெடுஞ்சாலைகளில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றாா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT