தஞ்சாவூர்

மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து திருடிய 2 போ் கைது

கும்பகோணத்தில் மளிகை கடையின் மேற்கூரையைப் பிரித்து திருடிய 2 பேரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் மளிகை கடையின் மேற்கூரையைப் பிரித்து திருடிய 2 பேரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெரியகடை வீதியில் மளிகை கடை வைத்திருப்பவா் பாகா் அலி (37). கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகா்அலி காலையில் கடையைத் திறந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாகா்அலி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினாா். இதில் சோலையப்பன் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் காசி விஸ்வநாதன் (19) மற்றும் ஆழ்வான் கோயில் தெருவைச் சோ்ந்த இந்திரகுமாா் மகன் கிளி விக்னேஷ் (18) ஆகிய 2 பேரையும் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

சூதாட்டம்: 4 போ் கைது

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி மரணம்!

விவசாயம், நெசவுத்தொழில்கள் நலிவடையாமல் இருக்க நடவடிக்கை: சௌமியா அன்புமணி

SCROLL FOR NEXT