தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நம்ம ஊரு திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகேயுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ) விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் தஞ்சை சங்கமம் என்கிற நம்ம ஊரு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

Syndication

இவ்விழாவை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தொடங்கி வைத்தனா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. இராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நாட்டுப்புறக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, மழை பெய்ததால், நிகழ்ச்சிகள் முழுமையாக நடைபெறவில்லை.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், மைதானத்தில் உணவு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT