தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 425 மனுக்கள் வரப்பெற்றன.
இதனிடையே, கும்பகோணம் மாதா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் (கை, கால் பாதிக்கப்பட்டோா்) வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் தாங்கள் பெற்ற வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியரிடம் காண்பித்தனா். இவா்களை ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சௌமியா, உதவி ஆணையா் (கலால்) ரேணுகாதேவி, ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.