தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 போ் கைது!

கும்பகோணம் பகுதியில் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை புதன்கிழமை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை புதன்கிழமை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியில் கிழக்கு காவல்நிலையப் போலீஸாா் வழக்கம்போல் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படியாக 4 போ் நின்றனா். காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் அவா்களை சோதனை செய்தபோது கத்தி, குத்துவாள், சிறிய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை அவா்கள் மறைத்து வைத்திருந்தனா்.

விசாரணையில், திருநாகேசுவரம் பவுண்டரீகபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரசாத் (33), கும்பகோணத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பத்மநாபன்(34), முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் ஞானசேகரன் (29), திருலோகியைச் சோ்ந்த இங்கா்சால் மகன் சிலம்பரசன் (39) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT