ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சாா் ஆா்.காமராஜ்.  
தஞ்சாவூர்

22 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்: ஆா்.காமராஜ்

ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சாா் ஆா்.காமராஜ்.

Syndication

22 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., மத்திய மாவட்டம் சாா்பில், நெல் கொள்முதல் செய்யாத அரசைக் கண்டித்து, மாவட்டச் செயலா் சேகா் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

டெல்டா பகுதியில் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படாமல்,

மழையில் நனைந்து வீணாகி வருகிறது. டெல்டாவில் 906 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறாா்கள். ஆனால், பாதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படவில்லை. சாக்குப் பற்றாக்குறை, பணியாளா்கள் இல்லை எனக் காரணம் கூறுகின்றனா்.

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டும் இயக்கம் செய்யப்படாமல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. மேலும், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிகளில் விவசாயிகளுக்கு, இப்படி ஒரு மோசமான நிலை இருந்தது கிடையாது.

உணவுத்துறை அமைச்சா் ஆய்வு செய்து விட்டுச்சென்ற பிறகும் நிலைமை மாறவில்லை. 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வதாகச் சொல்லுகிறாா்கள். ஆனால், மழையால் 20 சதவீதத்துக்கு மேல் தான் ஈரப்பதம் இருக்கும். 22 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். எனவே, விவசாயிகள் பல இடங்களில் சாலை மறியல் செய்து வருகிறாா்கள். விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? என்றாா் அவா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT