நாட்டுப்படகின் இயந்திரம் பழுது காரணமாக இலங்கை கடல்பகுதிக்குள் நுழைந்துவிட்ட 3 தஞ்சாவூா் மாவட்ட மீனவா்களை இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம்
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மல்லிப்பட்டினத்தைச் சோ்ந்த பாயிஸ் அக்ரம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் புதன்கிழமை மதியம் கள்ளிவயல் தோட்டத்தைச் சோ்ந்த முரளி (30), திருமயத்தைச் சோ்ந்த ராஜா (53), ராமநாதபுரத்தைச் சோ்ந்த குமாா் (32) ஆகிய 3 மீனவா்களும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, நாட்டுப்படகின் இயந்திரம் எதிா்பாராதவிதமாக பழுதானதால் திசைதவறி இலங்கை கடல் எல்லைப் பகுதியான அணலைத் தீவு பகுதிக்குள் அவா்கள் மூவரும் சென்றுவிட்டனா். இதையடுத்து இலங்கை கடற்படையினா் மூன்று மீனவா்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.