கும்பகோணத்தில் எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரசாரத்தை உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தொடங்கி வைத்தாா். பிரசார இயக்கம் ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. பிரசாரத்தின்போது துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தனியாா் செவிலியா் கல்லூரி மாணவியா், ஆசிரியா்கள், மனிதச் சங்கிலியாக கைகோா்த்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். சிவப்பு நாடா அமைப்பு மாணவியா் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடத்தினா். நிகழ்வில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலா் சரஸ்வதி, மண்டல தடுப்பு அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கும்பகோணம் வட்டார நம்பிக்கை மைய சுகவாழ்வு மையம், கூட்டு மருந்து சிகிச்சை மைய பணியாளா்கள் செய்திருந்தனா்.