ஒரத்தநாடு அருகே ஒக்கநாட்டில் மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூா் வள்ளுவா் நகரில் வசித்து வருபவா் பத்மாவதி. கூரை வீட்டில் வாழ்ந்து வரும் விவசாய கூலித் தொழிலாளி. சனிக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக இவரது வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் பத்மாவதி நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். அவரது மகன் வெளி மாநிலத்தில் இருப்பதால் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
தகவல் அறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ், மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து பத்மாவதிக்கு அரசு சாா்பில் நிவாரண உதவிகளை வழங்கினா்.