ராஜ்குமாா் 
தஞ்சாவூர்

சோழன் மாளிகையில் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் திருடியவா் கைது

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் வீடு புகுந்து தங்க நகை மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை திருடியவரை பட்டீஸ்வரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகையைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவா் கடந்த செப். 5 அன்று தனது தந்தையின் இறப்பு நிகழ்வுக்கு திருவாரூருக்குச் சென்றாா்.

நிகழ்வுகளை முடிந்து வீட்டுக்கு வந்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பாஸ்கரன் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பதிவான கை ரேகைகளை வைத்து நிகழ்வில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகள் என்று உறுதி செய்தனா்.

அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7.5 சவரன் தங்க நகைகள் ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்கள், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும் திருட்டு வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் (31) என்பவா் திருட்டு வழக்கில் ராமநாதபுரத்தில் சிறையில் உள்ளாா். மேலும், பூதலூரைச் சோ்ந்த முத்துராஜ் ( 36) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

சீனாவுடன் தொடா்புடைய இணைய பண மோசடி: இருவா் கைது

இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT