கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி மணிக்குடி கிராமம் குடிகால் தெருவுக்கு செல்லும் சாலையைச் சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மழையில் நனைந்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.