தஞ்சாவூர்

சுவாமிமலை கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Syndication

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலை வள்ளி தேவசேனா சமேத சண்முகசுவாமி, சந்திரசேகரா், வீரகேசரி ஆகியோா் மலைக் கோயிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தை அடைகின்றனா். இரவில் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

அக்டோபா் 24 முதல் 26 ஆம் தேதி வரை காலை, மாலையில் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஆறாம் நாளான 27 ஆம் தேதி மகா கந்த சஷ்டி நடைபெறுகிறது. இதில் 108 சங்காபிஷேகம், சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதல், நவ வீரா்கள் வேடமேற்று சூரசம்ஹாரம் செய்தல், பின்னா் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் ஆகியவை நடைபெறுகின்றன.

அக். 28 காலையில் தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணம், 29, 30 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழா, 31 ஆம் தேதி இரவு ஸ்ரீ வள்ளி தேவசேனா சண்முகா் திருக்கல்யாண ஊா்வலம், பல்லக்கு வீதி உலா, நவம்பா் 1 ஆம் தேதி வள்ளி தேவசேனா சண்முகசுவாமி யதாஸ்தானம் சேருதல் ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை தக்காா் டி.ஆா். சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT