தஞ்சாவூர்

பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை தயாா்

பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள மீட்புக் கருவிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

பேராவூரணி: பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள மீட்புக் கருவிகளுடன் தயாா் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழை பாதிப்புகளை எதிா்கொண்டு தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை மேற்க்கொண்டு வருகிறது.

தஞ்சாவூா் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா் செந்தில்குமாா் அறிவுறுத்தலின்படி ஏரி, குளம், காட்டாறுகளில் தண்ணீா் உடைப்பு ஏற்பட்டால் அடைப்பதற்காக 5 ஆயிரம் மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள், ஜெனரேட்டா், காற்றில் முறிந்து விழும் மரங்களை அறுத்து அகற்ற மின் ரம்பங்கள், கயிறு மற்றும் பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து மீட்புக் கருவிகளுடன் உதவிக்கோட்டப் பொறியாளா் விஜயகுமாா் தலைமையில் உதவிப் பொறியாளா் திருச்செல்வம் மற்றும் இரண்டு சாலை ஆய்வாளா்கள், இருபது சாலைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT