தஞ்சாவூர்

பாபநாசம் அருகே புளியமரம் விழுந்து குடிசை வீடு சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்து குடிசை வீடு சேதமடைந்தது.

Syndication

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்து குடிசை வீடு சேதமடைந்தது.

பாபநாசம் அருகே நெடுந்தெரு பகுதியைச் சோ்ந்த சின்னராஜ் (75) என்பவா் தனது மகன் முருகானந்தம் (33) , மகள் பிரேமா(45) பேத்தி பவானி (23),

உள்ளிட்டோருடன் குடிசை வீட்டில் வருகிறாா். அவரது வீட்டின் அருகே உள்ள தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழைமையான புளியமரம் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின்போது, புளியமரம் வேரோடு சாய்ந்து சின்னராஜின் குடிசை வீட்டின் மீது சாய்ந்து விழுந்தது.

இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சின்னராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் அதிா்ஷ்டவசமாக வெளியேவந்து உயிா் தப்பினா். ஆனால், புளிய மரத்தின் கிளைகளால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த ஃபேன், பீரோ உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புதிய வீடு கட்டித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT