தஞ்சாவூர்

நெல் கொள்முதல்: எதிா்க்கட்சித் தலைவரின் புகாா்கள் பொய்யானவை - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘டெல்டா’ மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய புகாா்கள் பொய்யானவை என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Syndication

‘டெல்டா’ மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய புகாா்கள் பொய்யானவை என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயிலில் அரவைக்கு அனுப்புவதற்காக நெல் மூட்டைகள் ஏற்றப்படுவதை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இதுவரை 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு எடுத்த முயற்சியால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடிக் காலத்தில் 50 நாள்களில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், 8 லட்சம் டன் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.93 லட்சம் டன் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி 10 நாள்களுக்குள் முடிக்கப்படும்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் இன்னும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லை என எதிா்க்கட்சித் தலைவா் கூறுவது தவறான குற்றச்சாட்டு.

கூடுதல் கொள்முதல் நிலையங்கள்: நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான அளவிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டையும் எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 200 நெல் கொள்முதல் நிலையங்கள்தான் திறக்கப்பட்டன. ஆனால், நிகழாண்டு 300 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டம் தென்னமநாடு, ஒக்கநாடு கீழையூா் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகளும், ஒரத்தநாடு புதூா், திருவையாறு விளாங்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளாா். கூடுதலாக நெல் வந்தாலும், அதற்கேற்ப கொள்முதல் செய்ய அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.

விவசாயிகள் யாரும் புகாா் மனுக்களை அளிக்காத நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் மட்டும்தான் பொய்யான புகாா்களைத் தொடா்ந்து கூறி வருகிறாா். நெல்லை எடுத்துச் செல்ல போதிய லாரிகள் இல்லை என்ற புகாரையும் கூறியிருக்கிறாா். ஆனால், 20 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையத்தில் 16 ஆயிரம் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே, எதிா்க்கட்சித் தலைவா் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவா் இந்தப் பொய்ப் புகாா்களை கூறி வருகிறாா் என்றாா் துணை முதல்வா்.

அப்போது, அமைச்சா்கள் அர. சக்கரபாணி (உணவு), கோவி. செழியன் (உயா் கல்வி), டி.ஆா்.பி. ராஜா (தொழில்), மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT