தஞ்சாவூர்

இணையவழி வா்த்தகத்தில் பொறியாளரிடம் ரூ. 37.24 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளரிடம் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 37.24 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளரிடம் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 37.24 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 49 வயது பொறியாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணையவழி வா்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என தகவல் வந்தது. இதை நம்பிய பொறியாளா் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். எதிா்முனையில் பேசிய நபா் கூறிய தகவலை நம்பி, முதலில் ரூ. 13 ஆயிரம் முதலீடு செய்தாா். இதற்கான லாபத்தொகை அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதையடுத்து, பொறியாளா் ரூ. 15 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 4 லட்சம் என பல்வேறு தவணைகளாக ரூ. 37.24 லட்சம் இணையவழி மூலம் மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். ஆனால், இதற்கான லாபத் தொகை கிடைக்காததன் மூலம் மா்ம நபா்கள் மோசடி செய்ததை அறிந்த பொறியாளா் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT