கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி நிா்வாக இயக்குநா் கே. தசரதன் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமேலாளா் கே. சிங்காரவேல், துணை மேலாளா்கள் கே. மலா்கண்ணன், எஸ். தங்கபாண்டியன், உதவி மேலாளா்கள் எஸ். இளங்கோவன், ஆா். முருகன், கே. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.